×

 கேவலமா இருக்கு: விஜய்சேதுபதி வாய்ஸை வறுத்தெடுக்கும் மார்வெல் ரசிகர்கள்! 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் விஜய்சேதுபதி டப்பிங் பேசியுள்ளதை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் விஜய்சேதுபதி டப்பிங் பேசியுள்ளதை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியுள்ளது. அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் எனப் பல படங்களின் சூப்பர் ஹீரோக்களின்
 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் விஜய்சேதுபதி  டப்பிங் பேசியுள்ளதை நெட்டிசன்கள்  சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் விஜய்சேதுபதி டப்பிங் பேசியுள்ளதை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியுள்ளது. அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் எனப் பல படங்களின் சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியில் வெளியான படம் தான் அவெஞ்சர்ஸ்.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான இப்படத்தின் தமிழ் ட்ரைலர் நேற்று வெளியானது. அதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் நடிகர் விஜய்சேதுபதி  டப்பிங் பேசியுள்ளார். அதேபோல் பிளாக் விடோ கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஆண்டிரியா டப்பிங் பேசியுள்ளார்.

விஜய்சேதுபதி வாய்ஸில் வெளிவரும் பட ட்ரெய்லர்கள் ஹிட்டடித்து வரும் நிலையில், அந்த யுக்தியை இப்படத்திற்கும் வைக்க, தமிழில் வசனம் எழுதியுள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் மார்வெல் சீரிஸ் படங்களில் வெளியான அயன்மேன் வாய்ஸ் தான் நல்லா இருக்கு.விஜய்சேதுபதி வாய்ஸ் இப்படத்திற்கு கேவலமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  

இதையும் படிங்க: ரஜினிகாந்த் 166 பட புகைப்படம் லீக்: அதிர்ச்சியில் படக்குழு!