×

 இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு!

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் 50 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். நாடு முழுவதும் ஜெய் ராம் கோஷம் எழுப்பப்படுவது குறித்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்த அந்த திரையுலக பிரபலங்கள், ஜெய் ராம் கோஷம் எழுப்புவதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றும், அப்படி கோஷம் எழுப்பாதவர்களின் மீது நாடு முழுவதுமே வன்முறையை பிரயோகிக்கும் முறை சமீபமாய் அதிகரித்து இருப்பதாகவும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம்
 

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் 50 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். நாடு முழுவதும் ஜெய் ராம் கோஷம் எழுப்பப்படுவது குறித்து தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்த அந்த திரையுலக பிரபலங்கள், ஜெய் ராம் கோஷம் எழுப்புவதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றும், அப்படி கோஷம் எழுப்பாதவர்களின் மீது நாடு முழுவதுமே வன்முறையை பிரயோகிக்கும் முறை சமீபமாய் அதிகரித்து இருப்பதாகவும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியவர்களின் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் முசாபர்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தேச துரோக வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது!
இது குறித்து பேசிய வழக்கறிஞர், அந்த கடிதத்தில் கையெழுத்திட்ட பிரபலங்கள் அனைவருமே குற்றவாளிகளாக புகார் மனுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். தேசத்தின் நன் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் கருத்துகள் இருந்ததற்காக இவ்வாறு வழக்கு தொடுத்திருப்பதாக தெரிவித்தார்.