×

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜினாமா

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் டெல்லி: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தங்களுக்கு சாதகமாக இருப்பார் என பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நினைத்தனர். ஆனால், வட்டி விகிதம், வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை
 

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

டெல்லி: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, பொறுப்பேற்ற உர்ஜித் படேல் தங்களுக்கு சாதகமாக இருப்பார் என பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நினைத்தனர். 

ஆனால், வட்டி விகிதம், வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது. இதன் மூலம், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சொந்த காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு’ என்றார்.

இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உர்ஜித் படேல் ராஜினாமா செய்த அடுத்த நாளில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.