×

இளைஞர்களின் கிளாசிக் ஜகான் RX100 மீண்டும் விற்பனைக்கு வருகிறதா?

கிளாசிக் அடையாளம் பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்றான யமஹா RX100 மீண்டும் சந்தைக்கு வருவது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை: கிளாசிக் அடையாளம் பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்றான யமஹா RX100 மீண்டும் சந்தைக்கு வருவது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனங்களின் கதாநாயகனாக இன்றும் வலம் வருவது யமஹா நிறுவனத்தின், RX100. மோட்டார் வாகன வணிகத்தில் சுஸூகியும் ஹோண்டாவும் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில், இடையில் புகுந்து அடித்து நொறுக்கியது யமஹா
 

கிளாசிக் அடையாளம் பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்றான யமஹா RX100 மீண்டும் சந்தைக்கு வருவது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை: கிளாசிக் அடையாளம் பெற்ற இரு சக்கர வாகனங்களில் ஒன்றான யமஹா RX100 மீண்டும் சந்தைக்கு வருவது தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனங்களின் கதாநாயகனாக இன்றும் வலம் வருவது யமஹா நிறுவனத்தின், RX100. மோட்டார் வாகன வணிகத்தில் சுஸூகியும் ஹோண்டாவும் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில், இடையில் புகுந்து அடித்து நொறுக்கியது யமஹா நிறுவனத்தின் RX100. 

1985-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட RX100, இன்று வரை திரைப்படங்களில் கதாநாயகன்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த அளவிற்கு இளைஞர்களின் இதயத்தை கவர்ந்த அந்த வாகனம், மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், “RX100 பைக் திரும்ப வரப்போவதாக 6 மாதத்துக்கு ஒரு முறை யாராவது வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அது சுத்த பொய். டிசம்பர் மாதம் ஜப்பானில் பைக்கை வெளியிடப்போவதாக வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள். அப்படி எந்தச் செய்தியும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. 

RX பைக்கில் இருந்தது யமஹாவின் 2 ஸ்டிரோக் இன்ஜின். 2 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு தடை போட்டு பல வருஷம் ஆகிறது. அந்த இன்ஜின்களுக்கு இருக்கும் தனித்தன்மை 4 ஸ்டிரோக் இன்ஜின்களுக்கு கிடையாது. ஆனால், 4 ஸ்டிரோக் இன்ஜின் குறைவான காற்று மாசு ஏற்படுத்தும். சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், சூப்பரான சத்தத்தோடும் யமஹாகிட்ட இருந்து ஒரு பைக் கண்டிப்பா வரும். அது எப்போதுமே RX100 ஆகாது” என யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.