×

இந்தியாவின் பொருளாதாரத்தில் 8.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும்.. உலக வங்கி கணிப்பு

2021ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 8.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று உலக வங்கி கணித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது கணிப்பை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், உலக வங்கி தனது ஜூன் 2021 சர்வதேச பொருளாதார வாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டில் உலக பொருளாதாரத்தில் 5.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும். இது 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தநிலைக்கு
 

2021ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 8.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது கணிப்பை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உலக வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், உலக வங்கி தனது ஜூன் 2021 சர்வதேச பொருளாதார வாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டில் உலக பொருளாதாரத்தில் 5.6 சதவீதம் வளர்ச்சி ஏற்படும்.

உலக வங்கி

இது 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தநிலைக்கு பின்னர் ஏற்படும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி. பெரும்பாலும் ஒரு சில பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் வலுவான எழுச்சி ஏற்படும். இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 8.3 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்று கணித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.)

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 7.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி ஏற்படும் என்று முதலில் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால், பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.