×

’டிக்டாக்’ யை வாங்கப்போகும் நிறுவனம் இதுதானா? #TikT0k

மிகக் குறைந்த காலத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற ஆப் வரிசையில் டிக்டாக் (TikT0k) ஆப்க்கு முக்கிய இடம் உண்டு. சிறியவர்கள், கல்லூரி மாணவர்கள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என எந்தப் பிரிவினரையும் விட்டு வைக்காமல் வளைத்துப்போட்டது டிக் டாக். டிக்டாக்கில் நடித்து பிரபலமானவர்கள் ஏராளம். ஜி.பி.முத்துவே அதற்கு சரியான உதாரணம். அவரின் வீடியோக்களை லட்சக்கணக்கில் பார்த்தார்கள். லட்சக்கணக்கில் அவரது பக்கத்தை ஃபாலோ செய்தார்கள். பல தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் அவரை பேட்டி எடுக்கும் அளவுக்கு அவரின் புகழ்
 

மிகக் குறைந்த காலத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற ஆப் வரிசையில் டிக்டாக் (TikT0k) ஆப்க்கு முக்கிய இடம் உண்டு. சிறியவர்கள், கல்லூரி மாணவர்கள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என எந்தப் பிரிவினரையும் விட்டு வைக்காமல் வளைத்துப்போட்டது டிக் டாக்.

டிக்டாக்கில் நடித்து பிரபலமானவர்கள் ஏராளம். ஜி.பி.முத்துவே அதற்கு சரியான உதாரணம். அவரின் வீடியோக்களை லட்சக்கணக்கில் பார்த்தார்கள். லட்சக்கணக்கில் அவரது பக்கத்தை ஃபாலோ செய்தார்கள். பல தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் அவரை பேட்டி எடுக்கும் அளவுக்கு அவரின் புகழ் பரவியது. இதற்கு ஒரே காரணம் டிக்டாக் எனும் ஆப் மட்டுமே.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா முழுக்கப் பரவியது. இதனால் சீனா நாட்டு பல ஆப்களை இந்திய அரசு தடை செய்தது. அவற்றில் டிக்டாக் ஆப்வும் ஒன்று. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கா தொடர்பான செயற்பாடுகளை மட்டும் அமெரிக்காவின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அமெரிக்காவில் டிக்டாக் தடையிருக்கையில் இது சாத்தியம்தானா என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஒ, அமெரிக்க அதிபரைச் சந்தித்து வந்திருக்கிறார். இந்நிலையில், டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்கா தொடர்பான செயற்பாடுகளை மட்டும் மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்குவதற்கான ஆய்வி ஈடுபட்டு வருகிறது.