×

ரூ.7,218 கோடி நஷ்டம்….. 80 லட்சம் இணைப்புகளை இழந்த வோடாபோன் ஐடியா…

வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,218.2 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,218.2 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன்
 

வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,218.2 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.7,218.2 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.50,897.9 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

வோடாபோன் ஐடியா

2020 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.10,830.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.11,146.4 கோடி ஈட்டியிருந்தது.

வோடாபோன் ஐடியா

கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை மொத்தம் 27.18 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜூன் காலாண்டு இறுதியில் வோடாபோன் ஐடியா சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 27.98 கோடியாக இருந்தது. ஆக கடந்த செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனம் 80 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது.