×

மின்சார பைக் நிறுவனத்தில் டிவிஎஸ் ரூ.30 கோடி முதலீடு

இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ், அல்ட்ராவயலெட் என்ற மின்சார வாகனங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. எப்77 எலக்ட்ரிக் பைக் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அல்ட்ரா வயலெட் நிறுவனமானது, கடந்த ஆண்டில் அதிதிறன் கொண்ட எப்77 என்ற எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது 2021ம் ஆண்டு வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ்
 

இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ், அல்ட்ராவயலெட் என்ற மின்சார வாகனங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

எப்77 எலக்ட்ரிக் பைக்

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அல்ட்ரா வயலெட் நிறுவனமானது, கடந்த ஆண்டில் அதிதிறன் கொண்ட எப்77 என்ற எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இது 2021ம் ஆண்டு வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் அல்ட்ராவயலெட் நிறுவனத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
2017ல் ரூ. 5 கோடி முதலீடு

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்து 14.87 சதவீத பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.