×

தக்காளி, வெங்காயம் உள்பட 12 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. மத்திய பிரதேச அரசு திட்டம்

மத்திய பிரதேசத்தில் தக்காளி, வெங்காயம் உள்பட 12 காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காய்கறிகள் மற்றும் பழங்களுககு குறைந்தபட்ச
 

மத்திய பிரதேசத்தில் தக்காளி, வெங்காயம் உள்பட 12 காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காய்கறிகள் மற்றும் பழங்களுககு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதில் இடைத்தரர்கள் தலையீடு மற்றும் பதுக்கலை எவ்வாறு நிறுத்துவது என்பது தொடர்பாக வரைவு தயாரிப்பதற்கு முன் விவசாயிகளுடன் ஒரு சுற்று சந்திப்புக்களை நடத்துவோம்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் கேரட் உள்பட 12 காய்கறிகளுக்கு முதல் கட்டமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது. பழங்களின் பட்டியல் இன்னும் இறுதி செய்யவில்லை. தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைகளை சேர்ந்த நிபுணர்கள் குழு சாகுபடி செலவினம் குறித்து மதிப்பிட்டு வருகிறது. குறைந்தபட்சம் 50 சதவீத லாபவரம்பை சேர்ப்பதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை சரி செய்யப்படும்.

பழங்கள்

மத்திய பிரதேசத்தில் 76 காய்கறி மற்றும் பழ மண்டிகள் உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையில் தங்களது பழங்கள் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2017 ஜூன் மாதத்தில் மாண்ட்சரில் நடந்த போராட்டங்களில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அந்த ஆண்டு மத்திய பிரதேச அரசு முதல் முறையாக வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.8 (கிலோவுக்கு) நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது. பல சந்தர்ப்பங்களில் சாகுபடி செலவினம் கிடைக்காததால் அவதிப்படும் விவசாயிகளுக்கு மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.