×

பாட்டா நிறுவனத்தின் தலைவராகும் முதல் இந்தியர்!

பாட்டா செருப்பு நிறுவனத்தின் தலைவராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் 126 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வருகிறார். பாட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக இருந்த சந்தீப் கட்டாரியா , தற்போது பாட்டா நிறுவனத்தின் உலகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த அலெக்ஸ் நசரத் 5 ஆண்டு கால பதவியை அடுத்து, தற்போது 49 வயதான கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாரியா சுமார் 25 ஆண்டுகால
 

பாட்டா செருப்பு நிறுவனத்தின் தலைவராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் 126 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வருகிறார்.

பாட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக இருந்த சந்தீப் கட்டாரியா , தற்போது பாட்டா நிறுவனத்தின் உலகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த அலெக்ஸ் நசரத் 5 ஆண்டு கால பதவியை அடுத்து, தற்போது 49 வயதான கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாரியா சுமார் 25 ஆண்டுகால தொழில்துறை அனுபவம் கொண்டவர். யுனிலீவர்,யம் பிராண்ட்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஐரோப்பிய பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பாட்டா இந்தியா நிறுவனத்தில் 2017 ஆண்டில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பாட்டா நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 5,800 விற்பனையகங்களை வைத்துள்ளது.1894 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டா நிறுவனத்தின் ஆண்டுக்கு 18 கோடி செருப்புகள் விற்பனையாகின்றன. 70 நாடுகளில் 35 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 22 இடங்களில் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை இதற்கு முன் பல இந்தியர்கள் அலங்கரித்து வருகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெள்ளா, ஆல்பபெட் நிறுவனத்தில் சுந்தர்பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா, ஐபிஎம் நிறுவனத்தில் அரவிந்த் கிருஷ்ணா, நோவார்டிஸ் நிறுவனத்தில் வசந்த் நரசிம்மன் ஆகியோர் வரிசையில் தற்போது சந்தீப் கட்டாரியா இணைந்துள்ளார்.