×

மீண்டும் டாடா நிறுவனம் கையில் செல்லப்போகிறதா ஏர் இந்தியா ?

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா சன்ஸ், பொதுத்துறை விமான நிறுவனமான அஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்ளது. இந்த நஷ்டத்தை சமாளிக்க ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே பலமுறை பங்குகளை விற்பப்பதற்கான முயற்சிகளை எடுத்தும் ஏர் இந்தியா பங்குகளை மத்திய அரசால்
 

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா சன்ஸ், பொதுத்துறை விமான நிறுவனமான அஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்ளது. இந்த நஷ்டத்தை சமாளிக்க ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே பலமுறை பங்குகளை விற்பப்பதற்கான முயற்சிகளை எடுத்தும் ஏர் இந்தியா பங்குகளை மத்திய அரசால் விற்பனை செய்ய முடியவில்லை.

ஏர் இந்தியா நிறுவனத்தை பல துணை நிறுவனங்களாக, பிரித்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும், மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டது. ஆனால், ஏர் இந்தியாவை பிரித்து விற்கும் திட்டத்தை தனியார் விமான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தற்போதுவரை ஏர் இந்தியாவை விற்கும் திட்டம் நிறைவேறவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு ஏற்கெனவே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், வெளிநாட்டு விமான தடங்களை விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எட்டப்படாததால், அந்த முன்வரைவு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது குறித்தும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், ஏர் இந்தியாவில் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதற்கு டாடா சன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 63 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விமான சேவையில் ஈடுபட்டுவந்த டாட்டா நிறுவனம், சுதந்திரத்துக்கு பின்னர் ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்தது. 1953 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொண்டது. அந்த நிறுவனத்தின் தலைவராக 1977 ஆம் ஆண்டுவரை ரத்தன் டாடா இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் டாடா நிறுவனம் விமான சேவையில் இறங்குவதற்கு முயற்சி செய்த பின்னரும், அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின்னர் 2013 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணந்து விஸ்தார நிறுவனத்தை தொடங்கியது. 2015 ஆம் ஆண்டில் விஸ்தார சேவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஏர்இந்தியா பங்குகளை வாங்குவதன் மூலம் முழுவேகத்தில் டாடா நிறுவனம் விமான சேவை துறையில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை . இந்த நிலையில், விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில், பொருத்தமான நேரத்தில், ஏர் இந்தியா குறித்து உரிய முடிவை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.