×

”சர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பு 3 மாதம் நீட்டிப்பு” – மத்திய அரசு அதிரடி!

சர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பை வரும் டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான பருவ ஆண்டில், 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில் கொரோனொ தொற்று பரவல் காரணமாக கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்றுமதி நடவடிக்கையில் தடைகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு காலவரம்பு தற்போது மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

சர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பை வரும் டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான பருவ ஆண்டில், 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில் கொரோனொ தொற்று பரவல் காரணமாக கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்றுமதி நடவடிக்கையில் தடைகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு காலவரம்பு தற்போது மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நடவடிக்கையின் மூலமாக, . சர்க்கரை ஆலைகளில் தேங்கி கிடக்கும் உபரி சர்க்கரையை ஏற்றமதி செய்து, அதன் மூலம் விவசாயிகளுக்கான கரும்பு கொள்முதல் நிலுவை பாக்கியை செலுத்த வைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்படி, செப்டம்பருடன் முடியும் சர்க்கரை ஏற்றுமதி காலவரம்பு, டிசம்பர் முடிய 3 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவ ஆண்டிற்கு 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே சர்க்கரை ஆலைகள் 57 லட்சம் டன்னுக்கான ஏற்றுமதி ஆர்டர்களை பெற்றுள்ளதாக உணவு அமைச்சக செயலாளர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தொற்று பரவல் காரணமாக மீதமுள்ள சர்க்கரையை ஏற்றுமதி செய்வதில் ஆலைகள் சந்தித்த நெருக்கடியை மனதில் கொண்டு, கூடுதல் அவகாசம் அளிக்க திட்டமிட்டு, காலவரம்பு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்