×

ஐஐடி-யில் படித்தால் கோடிகளில் சம்பளமா ? கூவி அழைக்கும் நிறுவனங்கள்!

ஊரடங்கு நாட்களில் , தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். படிப்பதற்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பிய இளைஞர்கள் , இப்போது எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என இறங்கி வேலைதேடும் நிலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அலையும் நிலையில்தான், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் வேலைகளில் சேர்கின்றனர். இந்த ஊடரங்கு நாட்களில், சர்வதேச நிறுவனங்கள் சிலவற்றில் இந்திய ஐஐடி களில் படித்தவர்கள் பலர் ஒரு கோடி ரூபாய்க்கும்
 

ஊரடங்கு நாட்களில் , தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தவர்கள்தான் அதிகம். படிப்பதற்கு ஏற்ற வேலை இல்லை என புலம்பிய இளைஞர்கள் , இப்போது எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என இறங்கி வேலைதேடும் நிலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அலையும் நிலையில்தான், ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் வேலைகளில் சேர்கின்றனர்.

இந்த ஊடரங்கு நாட்களில், சர்வதேச நிறுவனங்கள் சிலவற்றில் இந்திய ஐஐடி களில் படித்தவர்கள் பலர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வாங்கும் வேலைகளில் சேர்ந்துள்ளனர். மும்பை ஐஐடி வளாக நேர்காணலில் சுமார் 30 மாணவர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமான சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளனர். இந்த சம்பளத்துடன் அந்த நிறுவனங்களின் பங்குகளும் கிடைக்குமாம். அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் மற்றும் இதர ஊக்கத்தொகைகள் இல்லாமல் சம்பளம் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்குமாம். இப்படி வேலை வழங்கிய நிறுவனங்களில் முக்கியமானது மைக்ரோசாப்ட். மும்பை, கோரக்பூர், கவுகாத்தி , ரூர்கி ஆகிய இடங்களில் இருந்து தேர்வான மாணவர்களுக்கு சுமார் ரூ.1.2 கோடி வரை சம்பளம் கொடுத்துள்ளது.

ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த ஆப்டிவர் என்கிற வர்த்தக நிறுவனம் மும்பை ஐஐடியில் படித்த 7 மாணவர்களுக்கு ரூ.1.4 கோடி சம்பளம் வாங்கும் வேலைகளை அளித்துள்ளது. சாம்சங் நிறுவனம் முக்கிய ஐஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து 18 மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் வாங்கும் வேலைகளை அளித்துள்ளது. ஐஐடி கான்பூர், ஐஐடி டெல்லி ஆகிய இடங்களில் இருந்து 10 மாணவர்களை தேர்வு செய்துள்ளது. மும்பை ஐஐடியில் இருந்து 7 மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

பொதுவாகவே அமெரிக்காவின் பல மென்பொருள் நிறுவனங்கள், இந்தியாவின் ஐஐடி மாணவர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வேலை கொடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும். தற்போது முன்னணி நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் உள்ள இந்தியர்கள் பலரும் ஐஐடிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைவராக உள்ள இந்தியரான சுந்தர்பிச்சை, கோரக்பூர் ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.