×

ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பு –டிசிஎஸ் நிறுவனம் புதிய ”மைல்கல்” !

10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, இந்த மைல்கல்லை அடையும் 2வது இந்திய நிறுவனம் என்ற பெருமையை டிசிஎஸ் பெற்றுள்ளது. நாளை (7ம் தேதி) நடக்கும் நிர்வாக உயர்மட்ட குழு கூட்டத்தில், விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவை மீண்டும் எடுப்பது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து டிசிஎஸ்சின் பங்கு மதிப்பு
 

10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, இந்த மைல்கல்லை அடையும் 2வது இந்திய நிறுவனம் என்ற பெருமையை டிசிஎஸ் பெற்றுள்ளது.

நாளை (7ம் தேதி) நடக்கும் நிர்வாக உயர்மட்ட குழு கூட்டத்தில், விற்ற பங்குகளைத் திரும்ப வாங்கும் முடிவை மீண்டும் எடுப்பது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து டிசிஎஸ்சின் பங்கு மதிப்பு மளமளவென உயர்ந்தது. குறிப்பாக திங்கட்கிழமை காலை சந்தையில் வர்த்தகம் தொடங்கிய உடன், டிசிஎஸ்சின் பங்குகள் ஏறத்தாழ 6 சதவீதம் உயர்ந்து, பலரின் புருவத்தை உயர்த்தின.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் 6.18 சதவீதம் உயர்ந்த டிசிஎஸ் பங்கு விலை 2,678 ஆக புதிய உச்சத்துக்கு உயர்ந்தது. அதேப்போல தேசிய பங்குச் சந்தையில் 6.16 சதவீதம் உயர்ந்து, 2 ஆயிரத்து 679 ஆக உயர்ந்தது.

இதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனத்தின், சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை கடந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு பிறகு, இந்த மைல்கல்லை அடையும் 2வது இந்திய நிறுவனம் டிசிஎஸ் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 15 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்