×

பெட்ரோல், டீசல் விலை எதிரொலி: பணவீக்க விகிதம் 12.94% ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale Price Index) தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசனை அலுவலகம் இன்று வெளியிட்டது. அதன்படி நாட்டின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் மாதம் 10.49 சதவீதமாக
 

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதத்துக்கான மொத்தவிலை குறியீட்டை (Wholesale Price Index) தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசனை அலுவலகம் இன்று வெளியிட்டது.

அதன்படி நாட்டின் மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் மாதம் 10.49 சதவீதமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் 3 சதவீதம் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வின் எதிரொலியால் பணவீக்கம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்களின் விலை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கமானது 20.94 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 37.61 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல உற்பத்தி பொருட்களில் பணவீக்கம் மே மாதத்தில் 10.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் இது 9.01 சதவீதமாக இருந்தது. வெங்காய விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு இருந்தபோதிலும், மே மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஓரளவு குறைந்து 4.31 சதவீதமாக உள்ளது.