×

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது.. கடனுக்கான வட்டி விகிதம் குறையுமா?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் சில்லரை விலை
 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம்

சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளதால், அடுத்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும்போது, சில்லரை விலை பணவீக்கத்தை முக்கியமாக கருத்தில் கொள்ளும்.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளிவந்தது. எனவே இதன் தாக்கம் இன்றைய இந்திய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.