×

இறக்குமதி கார்களின் வரியை உயர்த்த திட்டம்- ஹோண்டா,வோக்ஸ்வேகன் கார்கள் விலை உயர வாய்ப்பு

இந்தியாவில், இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொடர் ஊரடங்கு காரணமாக, தொழில்துறை முடக்கம், வேலை இழப்பு, பொருளாதார சரிவு என நாடு பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், செலவை குறைத்து வருவாயை உயர்த்த வேண்டிய நெருக்கடி நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மட்டுமின்றி,
 

இந்தியாவில், இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர் ஊரடங்கு காரணமாக, தொழில்துறை முடக்கம், வேலை இழப்பு, பொருளாதார சரிவு என நாடு பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், செலவை குறைத்து வருவாயை உயர்த்த வேண்டிய நெருக்கடி நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மட்டுமின்றி, பாதி தயாரிக்கப்பட்டு உதிரிபாகங்களுடன் இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் கார்கள் மீதான இறக்குமதி வரியையும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள தங்களது துணை நிறுவனங்களிடம் பெறும் ராயல்டி தொகையை குறைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி உயர்த்தப்பட்டால், மெர்சிடஸ் பென்ஸ், வோக்ஸ்வேகன், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விற்பனை குறைந்து, புதிய முதலீடுகள் பாதிக்கும் சூழல் ஏற்படலாம் என வெளிநாட்டு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் உற்பத்தியை பலப்படுத்துவதற்காக, ஏற்றுமதி ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

எஸ்.முத்துக்குமார்