×

கொரோனாவால் குறையும் தங்கத்தின் தேவை… அதிரடி தள்ளுபடிகள் அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கொரொனா பரவல் தீவிரமாகப் பரவியது. பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. அப்போதே இருந்த பணத்தைக் கொண்டு தங்கத்தை வாங்கி குவித்ததால் திடீரென்று விலை உயர்ந்தது. ஆனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துகொண்டே சென்றதால் தங்கம் விலை சரிவை நோக்கிச் சென்றது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன்பே இறங்குமுகத்தில் சென்ற தங்கம் விலை இப்போது பெருமளவு குறைந்திருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட
 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கொரொனா பரவல் தீவிரமாகப் பரவியது. பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. அப்போதே இருந்த பணத்தைக் கொண்டு தங்கத்தை வாங்கி குவித்ததால் திடீரென்று விலை உயர்ந்தது. ஆனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துகொண்டே சென்றதால் தங்கம் விலை சரிவை நோக்கிச் சென்றது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன்பே இறங்குமுகத்தில் சென்ற தங்கம் விலை இப்போது பெருமளவு குறைந்திருக்கிறது. கொரோனா இரண்டாம் அலையால் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துள்ளது. இதனால் பெரும்பாலான தங்க நகைக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் வடிவிலேயே தங்கம் வாங்குகின்றனர். இதனால் கடைகளில் வாங்கும் பிசிக்கல் தங்கத்தின் விற்பனை பெருமளவு குறைந்திருக்கிறது. விற்பனையை அதிகரிக்க டீலர்கள் 2 டாலர், அதாவது 1 அவுன்ஸ் தங்கத்திற்கு 150 ரூபாய் தள்ளுபடியை அறிவித்துள்ளனர். இதற்குப் பிறகு மீண்டும் எப்போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என தெரியாது என்பதால் அதிரடி சலுகைகளை அறிவித்திருப்பதாக டீலர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஜூன் காலாண்டில் தங்கத்தின் நுகர்வு குறையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்திருக்கிறது. அதேசமயம் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அதிகளவு நுகரக் கூடிய சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அங்கு தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.