×

இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி 9 வது ஆண்டாக முதலிடம்- ரூ. 6,58,400 கோடி சொத்து மதிப்பு

இந்திய அளவில் பெரும் பணக்காரர்களில் தொடர்ந்து 9 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஒரு ஆண்டில், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய அளவில் பெரும் செல்வந்தராகவும், உலக அளவில் 4 வது மிகப்பெரிய செல்வந்தராகவும் உள்ளார் என்பது
 

இந்திய அளவில் பெரும் பணக்காரர்களில் தொடர்ந்து 9 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில், முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆசிய அளவில் பெரும் செல்வந்தராகவும், உலக அளவில் 4 வது மிகப்பெரிய செல்வந்தராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 பணக்காரர்களின் முகேஷ் அம்பானி தவிர, இதர தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்வு கண்டுள்ளனர்.

இரண்டாவது இடத்தில், இந்துஜா சகோதரர்கள் ரூ.1,43,700 கோடி சொத்து வைத்துள்ளனர். ஹெச்.சி.எல். நிறுவனத்தின் ஷிவ் நாடார் ரூ.1,47,700 கோடி மதிப்புடன் 3 வது இடத்தில் உள்ளார். அதற்கடுத்த இடங்களில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, விப்ரோ அஸிம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 100 செல்வந்தர்களை கணக்கிடுகையில், கடந்த ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். அவர்களில் 19 பேரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொழில்துறை வளர்ச்சி, அதன் மூலம் அடையும் ஆதாயம் மற்றும் இந்தியாவின் நவீன வளர்ச்சியில் வளரும் பிசினஸ்மேன்கள் குறித்து தெரிந்து கொள்ள இந்த சொத்து பட்டியல் உதவும் என ஐஐஎஃப்எல் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பையில் வசிப்பதாகவும், அதற்கடுத்து டெல்லி, பெங்களூரு நகரங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.