×

மீண்டும் சூடுபிடித்த வாகன விற்பனை.. ஆகஸ்டில் விற்பனையில் ஜொலித்த மாருதி, எஸ்கார்ட்ஸ், ஹூண்டாய்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி, எஸ்கார்ட்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் வாகன விற்பனை நன்றாக இருந்தது. பல மாதங்களாக மந்தகதியில் இருந்த வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1.24 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தமே 1.06 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.
 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி, எஸ்கார்ட்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் வாகன விற்பனை நன்றாக இருந்தது.

பல மாதங்களாக மந்தகதியில் இருந்த வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1.24 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தமே 1.06 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 45,809 கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 38,205 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

எஸ்கார்ட்ஸ்

வேளாண் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ் அக்ரி மெஷினரி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 7,268 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 80 சதவீதம் அதிகமாகும். 2019 ஆகஸ்ட் மாதத்தில் எஸ்கார்ட்ஸ் அக்ரி மெஷினரி நிறுவனம் 4,035 டிராக்டர்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. சாதகமான பருவமழை மற்றும் காரீப் பருவ சாகுபடி நன்றாக இருந்தது, நல்ல பணப்புழக்கம் போன்றவற்றால் டிராக்டர் விற்பனை நன்றாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.