×

ஐ.டி.சி. நிகர லாபம் ரூ.3,748.4 கோடி… பங்கு ஒன்றுக்கு ரூ.5.75 இறுதி டிவிடெண்ட் வழங்க ஒப்புதல்

ஐ.டி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,748.4 கோடி ஈட்டியுள்ளது. சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,748.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 1.3 சதவீதம் குறைவாகும். 2021 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி.
 

ஐ.டி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,748.4 கோடி ஈட்டியுள்ளது.

சிகரெட் முதல் பிஸ்கட், கோதுமை மாவு, நோட்புக் வரை பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,748.4 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 1.3 சதவீதம் குறைவாகும்.

ஐ.டி.சி.

2021 மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.14,157 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் மொத்த செலவினம் 31.5 சதவீதம் அதிகரித்து ரூ.10,075.03 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐ.டி.சி.

ஐ.டி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5.75 இறுதி டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை 2.88 சதவீதம் சரிந்து ரூ.209.00ஆக குறைந்தது.