×

“வட்டிக்கு வட்டி சலுகை – எந்தெந்த கடன்களுக்கு கிடைக்கும்?” –மத்திய அரசு தகவல் !

ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், அது எத்தகைய கடன்களுக்கு பொருந்தும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான அதிகம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த கடன்களுக்கு கூட்டு வட்டி விதிக்கப்படுவதில் சலுகை கிடைக்கும் என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. அதன்படி, முதலில் ரூ.2 கோடி வரையிலான கடன்
 

ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், அது எத்தகைய கடன்களுக்கு பொருந்தும் என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான அதிகம் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த கடன்களுக்கு கூட்டு வட்டி விதிக்கப்படுவதில் சலுகை கிடைக்கும் என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. அதன்படி, முதலில் ரூ.2 கோடி வரையிலான கடன் என்பதை வங்கிகள், ஒரே கடனாக பார்க்காது என்றும், பல்வேறு வங்கிகளில் பெறப்பட்ட வீடு, வாகனக்கடன் கல்விக்கடன் என ஒட்டுமொத்த கடன் தொகையாக கணக்கிட்டு மட்டுமே பார்க்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்சாலைகளுக்கான கடன்கள், கல்விக்கடன், வீடு மற்றும் வாகனக்கடன், நுகர்வோர் பொருட்களுக்கான கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன், உள்ளிட்ட கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிப்பதில் இருந்து சலுகை கிடைக்கும் என தெரிகிறது.

அதே சமயம், பிக்சட் டெபாசிட்டுகளுக்கு எதிரான கடன்கள், பத்திரங்கள் மற்றும் பங்குகள் மீதான கடன்களுக்கு இந்த வட்டி சலுகை பொருந்தாது என்றும் தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்