×

தொடர்ந்து 4வது மாதமாக நவம்பரிலும் பயணிகள் வாகனங்கள் விற்பனை அமோகம்… 30 நாளில் 3 லட்சம் கார்கள் காலி

தொடர்ந்து 4வது மாதமாக கடந்த நவம்பரிலும் பயணிகள் வாகனங்கள் விற்பனை உயர்ந்துள்ளது. அந்த மாதத்தில் 30 நாளில் சுமார் 3 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாகனங்கள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. லாக்டவுன், வேலை நிலவரம் சரியில்லாதது, வருமானம் பாதிப்பு போன்ற காரணங்களால் பலர் வாகனங்கள் வாங்கும் எண்ணத்தை ஒத்தி வைத்தனர். தற்போது லாக்டவுன் கிட்டத்தட்ட தளர்த்தப்பட்டு விட்டது, பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கியது
 

தொடர்ந்து 4வது மாதமாக கடந்த நவம்பரிலும் பயணிகள் வாகனங்கள் விற்பனை உயர்ந்துள்ளது. அந்த மாதத்தில் 30 நாளில் சுமார் 3 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வாகனங்கள் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. லாக்டவுன், வேலை நிலவரம் சரியில்லாதது, வருமானம் பாதிப்பு போன்ற காரணங்களால் பலர் வாகனங்கள் வாங்கும் எண்ணத்தை ஒத்தி வைத்தனர். தற்போது லாக்டவுன் கிட்டத்தட்ட தளர்த்தப்பட்டு விட்டது, பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மீண்டும் வாகனங்களை வாங்க தொடங்கி விட்டனர்.

கார்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயணிகள் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நான்காவது மாதமாக கடந்த நவம்பரிலும் பயணிகள் வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 2020 நவம்பரில் மொத்தம் 2.86 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது என வாகனத்துறை மதிப்பிட்டுள்ளது. இது 2019 நவம்பர் மாதத்தை காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 2.63 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

கார் மாடல்கள்

பயணிகள் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருவது வாகன தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் பயணிகள் வாகன விற்பனை சிறப்பாக இருக்கும் இத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.