×

ஆகஸ்டில் தொழில்துறை 8.5 % வீழ்ச்சி – ஏப்- ஆக. வரை 17.8 % சரிவு

நாட்டின் எட்டு முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆகஸ்டில் 8.5% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்கள் முடக்கத்தை சந்தித்தன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள், சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் எட்டு முக்கிய தொழில் துறைகளாக கருதப்படும், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம்
 

நாட்டின் எட்டு முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆகஸ்டில் 8.5% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்கள் முடக்கத்தை சந்தித்தன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள், சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் எட்டு முக்கிய தொழில் துறைகளாக கருதப்படும், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் ஆகஸ்டில் 8.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.வருடாந்திர அடிப்படையில், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த புள்ளிவிபரம் தெரியவந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேப்போல ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி 17.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆறு மாதமாக 8 முக்கிய தொழில் துறைகளின் தொடர் வீழ்ச்சிக்கு ஸ்டீல், சுத்திகரிப்பு பொருட்கள், மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தி சரிவே முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை, உரம் மற்றும் நிலக்கரியை தவிர மற்ற தொழில் துறைகளின் உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலில் தெரியவந்துள்ளது.

  • எஸ். முத்துக்குமார்