×

குறைந்து வரும் சில்லரை விலை பணவீக்கம்.. தொழில்துறை உற்பத்தியில் வளர்ச்சி… மத்திய அரசு ஹேப்பி

கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் 4.29 சதவீதமாக குறைந்தது மேலும் கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 22.6 வளர்ச்சி கண்டுள்ளது. சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் அந்த கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கடந்த ஏப்ரல்
 

கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் 4.29 சதவீதமாக குறைந்தது மேலும் கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 22.6 வளர்ச்சி கண்டுள்ளது.

சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் அந்த கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.29 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.52 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 5வது மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறை

கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 22.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் லாக்டவுன் காரணமாக கடந்த 2020-21ம் நிதியாண்டில் தொழில்துறை உற்பத்தி 8.6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டு இருப்பது, கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்திருப்பதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் நாளை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.