×

”இந்தியாவின் ஜிடிபி 11.5 % வீழ்ச்சி அடையும்” மூடி நிறுவனம் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 11.5 சதவீத சரிவை சந்திக்கும் என மூடி நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ரேட்டிங் நிறுவனமான மூடி, உலக நாடுகளின் ஜிடிபி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 4 சதவீத சரிவை சந்திக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் தற்போதை நிலையை கருத்தில் கொண்டு தனது கணிப்பை மாற்றி வெளியிட்டுள்ள மூடி நிறுவனம், நடப்பு
 

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 11.5 சதவீத சரிவை சந்திக்கும் என மூடி நிறுவனம் கணித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ரேட்டிங் நிறுவனமான மூடி, உலக நாடுகளின் ஜிடிபி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 4 சதவீத சரிவை சந்திக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் தற்போதை நிலையை கருத்தில் கொண்டு தனது கணிப்பை

மாற்றி வெளியிட்டுள்ள மூடி நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, (ஜிடிபி) மைனஸ் 11.5 சரிவை சந்திக்கும் என கணித்துள்ளது.

மேலும் ஜி20 நாடுகளிலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ள மூடி நிறுவனம், 2021ம் நிதியாண்டில் 10.6 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் ஜிடிபி, வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றும் அது தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.