×

“இந்திய ஊடகம்- பொழுதுபோக்கு துறை – ரூ.4 லட்சம் கோடியாக வளர்ச்சி பெறும்” – கணிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 2024ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அதிகரித்து 5 ஆயிரத்து 500 கோடி டாலர் வர்த்தகம் கொண்ட துறையாக வளர்ச்சி பெறும் என்று பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் ” குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் மீடியா அவுட்லுக் 2020-2024 என்ற கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மதிப்பு, 2024ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் உயர்ந்து 5 ஆயிரத்து 500 கோடி
 

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, 2024ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் அதிகரித்து 5 ஆயிரத்து 500 கோடி டாலர் வர்த்தகம் கொண்ட துறையாக வளர்ச்சி பெறும் என்று பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் ” குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் மீடியா அவுட்லுக் 2020-2024 என்ற கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மதிப்பு, 2024ம் ஆண்டுக்குள் 10 சதவீதம் உயர்ந்து 5 ஆயிரத்து 500 கோடி டாலர் வர்த்தகம் கொண்ட துறையாக வளர்ச்சி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ரூபாய் மதிப்பில் 4 லட்சத்து 6 ஆயிரம் கோடி) மேலும் சர்வதேச அளவில் இந்த துறையின் வளர்ச்சியில், ஒடிடி தளங்கள், இணையதள விளம்பரங்கள், வீடியோக்கள், கேம்ஸ் மற்றும் இ- ஸ்போர்ட்ஸ் பிரிவு, இசை மற்றும் பாட்கேஸட்டுகள் ஆகியவை சிறப்பான வளர்ச்சியை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவில், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மொத்த வருவாயில் டிஜிட்டல் வருவாய் மட்டும் 60 சதவீத பங்களிப்பை அளிக்கும் நிலை ஏற்படும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஒடிடி வீடியோ தளங்கள் 2024ம் ஆண்டுக்குள் 5.2 சதவீத வளர்ச்சியை பெறும் என்றும் அதனை தொடர்ந்து, இணையதள விளம்பர துறை சிறப்பான வளர்ச்சியை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் நுகர்வோர் வருவாய் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் நாடாக இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை அடையும் என்றும் அதில் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று காலக்கட்டத்துக்கு பிறகு, உலகளவில் ஒடிடி பிரிவில், இந்தியா தான் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட சந்தையாக உருவாக வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

-எஸ். முத்துக்குமார்