×

தொழில் தொடங்குவதற்கு உடனடி அனுமதி- மத்திய அரசு அறிவிப்பு

தொழில்துறை சீர்திருத்தங்களில் இந்திய அளவில் ஆந்திர மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.காணொலி காட்சி வழியாக இந்த தரவரிசைப் பட்டியலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் உலக அளவில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முன்னேறி உள்ளதாக குறிப்பிட்டார்.அம்ருத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 57 நகரங்களில், தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் எளிதாக்கப்படுவதாக
 

தொழில்துறை சீர்திருத்தங்களில் இந்திய அளவில் ஆந்திர மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
காணொலி காட்சி வழியாக இந்த தரவரிசைப் பட்டியலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.


அப்போது பேசிய அமைச்சர், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் உலக அளவில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முன்னேறி உள்ளதாக குறிப்பிட்டார்.
அம்ருத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 57 நகரங்களில், தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் எளிதாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகளில், 2017 ஆம் ஆண்டில் 185 வது இடத்தில் இருந்த இந்தியா 2020 ஆம் ஆண்டில் 27 வது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.


தற்போது, பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், கட்டுமான பணிகள், ஆன்லைன் தொழில்களை தொடங்குவதற்கு உடனடி அனுமதி அளிக்கப்படும் என ஹர்தீப்சிங் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள நகரங்களில், தொழில் தொடங்குவதற்கு, காகித ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்றும், காப்பீடு, கட்டிட அனுமதிகள் உடனே அளிக்கப்படும் எனவும் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.