×

எச்.டி.எப்.சி. லாபம் 9 சதவீதம் அதிகரிப்பு.. பங்கு ஒன்றுக்கு ரூ.23 டிவிடெண்ட் பரிந்துரை

எச்.டி.எப்.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றும், அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி.நிறுவனத்தின் நிகர வட்டி
 

எச்.டி.எப்.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ஒன்றும், அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.3,180 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் அதிகமாகும்.

எச்.டி.எப்.சி. நிறுவனம்

2021 மார்ச் காலாண்டில் எச்.டி.எப்.சி.நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் ரூ.4,065 கோடியாக குறைந்துள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 0.1 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர வட்டி வருவாயாக ரூ.4,068 கோடி ஈட்டியிருந்தது.

எச்.டி.எப்.சி. நிறுவனம்

2021 மார்ச் இறுதி நிலவரப்படி, எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 1.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21 நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்று ரூ.23 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது எச்.டி.எப்.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.70 சதவீதம் அதிகரித்து ரூ.2,496.25ஆக உயர்ந்தது.