×

”அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் ரூ. 10,000 முன்பணம்” – மத்திய அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு வட்டியில்லா முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வட்டியில்லாமல் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த தொகையை பின்னர் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வீதம் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வசூலிக்கப்படும்.
 

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு வட்டியில்லா முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வட்டியில்லாமல் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த தொகையை பின்னர் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வீதம் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வசூலிக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலத்தில் இந்த தொகையை அவர்கள் செலவு செய்துகொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த தொகை ரூபே கார்டு மூலமாகத்தான் வழங்கப்படும் என்றும் இந்த தொகையை வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் செலிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபே கார்ட் வடிவில் வழங்கப்படும் இந்த முன்பணத்தை டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் மூலமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்றும் அரசு கருதுகிறது.

மேலும், இதன் மூலம் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என்றும், ரூபே பிராண்டை மேலும் பிரபலப்படுத்தவும் முடியும் என அரசு நினைப்பதாக தெரிகிறது. இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலிவிட திட்டமிட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்