×

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனம் ரூ.3675 கோடி முதலீடு

பெரு நிறுவனங்களுக்கான ஆலோசனைகள் அளிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக், ரூ.3,675 கோடியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு செய்ய உள்ளது. கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திரட்டிய, மூன்றாவது மிகப் பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்று. இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 0.84 சதவீத பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் பெற உள்ளது. இந்த முதலீடு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் ரூ.13,050 கோடி
 

பெரு நிறுவனங்களுக்கான ஆலோசனைகள் அளிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக், ரூ.3,675 கோடியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு செய்ய உள்ளது.

கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திரட்டிய, மூன்றாவது மிகப் பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்று. இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 0.84 சதவீத பங்குகளை ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் பெற உள்ளது.

இந்த முதலீடு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் ரூ.13,050 கோடி முதலீடு திரட்டி உள்ளது. இதற்கு முன்னர் சில்வர் லேக் பார்ட்னர்ஸ் மற்றும் கேகேஆர் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

ரிலையன்ஸ் துணை நிறுவனங்களில், ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனம் இதுவரை சுமார் ரூ.6,598 கோடிவரை முதலீடு செய்துள்ளன. இதன்காரணமாக இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.