×

வார இறுதி நாட்களில் இலவச சேவை – நெட்பிளிக்ஸ் திட்டம்

இந்தியாவில் வார இறுதி நாட்களில், ஒர முறை நெட்பிளிக்ஸ் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிடி தளங்களில் முன்னணியில் உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், பல புதிய வெப்சீரிஸ், புதுப்புது திரைப்படங்கள் என எண்ணற்ற சேவைகள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. அதன் போட்டி நிறுவனமான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பல புதுப்படங்களை அவ்வப்போது வெளியிட்டாலும், நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ்க்கு பிரபலமாக விளங்குகிறது. நெட்பிளிக்ஸ் வெப் சீரிசுக்கு உலகளவில்
 

இந்தியாவில் வார இறுதி நாட்களில், ஒர முறை நெட்பிளிக்ஸ் சேவையை இலவசமாக வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிடி தளங்களில் முன்னணியில் உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், பல புதிய வெப்சீரிஸ், புதுப்புது திரைப்படங்கள் என எண்ணற்ற சேவைகள் மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. அதன் போட்டி நிறுவனமான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பல புதுப்படங்களை அவ்வப்போது வெளியிட்டாலும், நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ்க்கு பிரபலமாக விளங்குகிறது. நெட்பிளிக்ஸ் வெப் சீரிசுக்கு உலகளவில் தனி ரசிக பட்டாளம் உண்டு. இந்தியாவை பொறுத்தவரை, அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, புதிய வாடிக்கையாளர்களை கவர பல புதிய திட்டங்களை வகுத்து வரும் நெட்பிளிக்ஸ், வார இறுதி நாட்களில் ஒரு முறை இலவச டிரையல் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே புதிய வாடிக்கையாளர்களை கவர, டிரையல் பீரியட் என்ற பெயரில் 30 நாட்களுக்கு இலவச சேவையை நெட்பிளிக்ஸ் அளித்து வருகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு வார இறுதி நாட்களில் ஒருமுறை இலவசமாக நெட்பிளிக்ஸ் சேவையை பயன்படுத்தி பார்த்து அதன் அனுபவத்தை பெறுவதற்கு வாய்ப்பு அளிக்க நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை சேவை அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், புதிய வாடிக்கையார்களை கவரும் விதமாக மேலும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, வார இறுதி நாட்களில் ஒரு முறை நெட்பிளிக்ஸ் சேவையை இலவசமாக பெறும் வசதியை பெறும் வாடிக்கையாளர்கள் அதன் தளத்தில் உள்ள அனைத்து வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்