×

”தென்கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயனத்துக்கு கூடுதல் வரி?”

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும் வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் சமீப காலமாக தென் கொரியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதனால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து இது குறித்து, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் விசாரணை பிரிவான வணிக தீர்வுகளுக்கான முதன்மை இயக்குனரகம் (DGTR) இது தொடர்பான
 

தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன பொருள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தலீக்குநீரிலி (phthalic anhydride)எனப்படும் வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் சமீப காலமாக தென் கொரியாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதனால் உள்நாட்டு தொழில்துறை பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து இது குறித்து, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் விசாரணை பிரிவான வணிக தீர்வுகளுக்கான முதன்மை இயக்குனரகம் (DGTR) இது தொடர்பான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளது. அதன்படி, தென்கொரியாவில் இருந்து அதிகளவில் இந்த கெமிக்கல் இறக்குமதியாகி உள்ளதும், அதன் மூலம் உள்நாட்டு தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் கெமிக்கல் மீதான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழில்துறையினர் பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • எஸ். முத்துக்குமார்