×

செப்டம்பரில் ஏற்றுமதி 5.27 % வளர்ச்சி – ஆறு மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி உயர்வு!

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்த நாட்டின் ஏற்றுமதி, செப்டம்பரில் 5.27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு செப்டம்பரில், 27.4 பில்லியன் டாலர் என்றளவில் நாட்டின் ஏற்றுமதி 5.27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயம் இறக்குமதி, 30.31 பில்லியன் டாலர் என்றளவில் 19.6 சதவீதம்
 

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்த நாட்டின் ஏற்றுமதி, செப்டம்பரில் 5.27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையின் படி, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு செப்டம்பரில், 27.4 பில்லியன் டாலர் என்றளவில் நாட்டின் ஏற்றுமதி 5.27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே சமயம் இறக்குமதி, 30.31 பில்லியன் டாலர் என்றளவில் 19.6 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், 2019ம் ஆண்டு செப்டம்பரில் 11.67 பில்லியன் டாலர் என்றளவில் இருந்த வணிக பற்றாக்குறை, கடந்த செப்டம்பரில் 2.91 பில்லியன் டாலராக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் இரும்பு தாதுப்பொருட்கள் ஏற்றுமதி 109.52 சதவீதமும், அரிசி 92.44 சதவீதமும், ஆயில் மீல்ஸ் 43.9 சதவீதமும், மருந்து பொருட்கள் 24.36 சதவீதமும், பால் மற்றும் இறைச்சி பொருட்கள் 19.96 சதவீதமும் என்றளவில் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டுள்ளன.

இது ஒருபுறமிருக்க, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 125.06 பில்லியன் டாலர் என்றளவில் 21.43 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இறக்குமதி 148.69 பில்லியன் டாலர் என்றளவில் 40 சதவீத எதிர்மறை வளர்ச்சியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்