×

தேவ்யானி இன்டர்நேஷனல் வருவாய் 27 சதவீதம் அதிகரிப்பு.. லாபம் ரூ.71 கோடி..

 

தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.71 கோடி ஈட்டியுள்ளது. 

சங்கிலி தொடர் துரித சேவை ரெஸ்டாரண்ட் ஸ்டோர்களை நடத்தி வரும் தேவ்யானி இன்டர்நேஷனல் அண்மையில் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.71 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.6 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.66 கோடி ஈட்டியிருந்தது.

2022 டிசம்பர் காலாண்டில் தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.790 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.624 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டில் தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனம் புதிதாக  மொத்தம்  81 புதிய ஸ்டோர்களை திறந்துள்ளது. 

2022 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மொத்த ஸ்டோர்களின் எண்ணிக்கை 1,177ஆக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, தேவ்யானி இன்டர்நேஷனல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.62 சதவீதம் குறைந்து ரூ.151.50ஆக இருந்தது.