×

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள்… தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்

2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கால அவகாசத்தை தாண்டி கணக்கை தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைந்த தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். அதேசமயம் 60 முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ரூ.5
 

2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கால அவகாசத்தை தாண்டி கணக்கை தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைந்த தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். அதேசமயம் 60 முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஜூலை 31ம் தேதிக்குள் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல்

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன், பின்பு படிப்படியான லாக்டவுன் தளர்வு காரணமாக வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மற்றும் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டனர். இதனையடுத்து கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வருமான வரி கணக்கு தாக்கல்

தற்போது 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆகையால் இதுவரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தாவர்கள் இன்றைக்குள் தாக்கல் செய்து விடுங்கள். காலதாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அந்த கடந்த ஆண்டு அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. தற்போது வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் விதிக்கப்படும் அபராத தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017 பட்ஜெட்டில் வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.