×

‘சீன எல்இடி பல்புகள் இனி மின்னுமா” ? – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டம்?

இறக்குமதி செய்யப்படும் எல்இடி பல்புகள், இந்திய தர நிர்ணய கழகத்தின் ( பிஐஎஸ்) விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விதிகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில், நாடெங்கிலும் அலங்கார எல்இடி விளக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்களில் ஏராளமான எல்இடி பல்புகளை பார்க்க முடிகிறது. இத்தகைய பல்புகளில் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதியாவதாக கூறப்படுகிறது. அதிலும் பெரும்பாலானவை
 

இறக்குமதி செய்யப்படும் எல்இடி பல்புகள், இந்திய தர நிர்ணய கழகத்தின் ( பிஐஎஸ்) விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விதிகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில், நாடெங்கிலும் அலங்கார எல்இடி விளக்குகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்களில் ஏராளமான எல்இடி பல்புகளை பார்க்க முடிகிறது. இத்தகைய பல்புகளில் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதியாவதாக கூறப்படுகிறது. அதிலும் பெரும்பாலானவை எல்லை கடந்து சட்டவிரோதமாக இறக்குமதியாவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் உள்நாட்டு எல்இடி பல்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால், அவர்களை காக்கும் வகையில் இத்தகைய சட்டவிரோத எல்இடி பல்பு இறக்குமதியை தடுக்கவும் மத்திய அரசு அது தொடர்பான விதிகளை கடுமையாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, கடைகளில் இருந்து ஆய்வுக்காக ஆங்காங்கே பல்புகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டு, அவை இந்திய தர் நிர்ணய கழகத்தின் விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் விதி மீறல் நடைபெற்றுள்ளது தெரியவந்தால், அதன் இறக்குமதிக்கும் தடைவிதிக்கும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லடாக்கில் சீனாவுடனான எல்லைப்பிரச்னைக்கு பிறகு, அந்நாட்டிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சீன இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கை மற்றும் சீன செயலிகளுக்கு தடை என பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து, தற்போது எல்இடி பல்புகள் இறக்குமதி தொடர்பான நடவடிக்கையையும் எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்