×

செப்டம்பரில் கார் விற்பனை 31 % உயர்வு – மாருதி தகவல்

கடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தால் கார் விற்பனை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்தன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. குறிப்பாக கார் உள்ளிட்ட வாகன விற்பனை படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம்
 

கடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தால் கார் விற்பனை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்தன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளன. குறிப்பாக கார் உள்ளிட்ட வாகன விற்பனை படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கார் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 640 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம், நடப்பாண்டு செப்டம்பரில் 30.8 சதவீதம் அதிகமாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 442 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், உள்நாட்டு விற்பனை 32.2 சதவீதமும் ஏற்றுமதி 9 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மினி கார்களான ஆல்டோ மற்றும் எஸ் பிரஸ்சோ கார்களின் விற்பனை 35.7 சதவீதமும், ஸ்விப்ட், செலிரீயோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய சிறிய ரக கார்களின் விற்பனை 47.3 சதவீதமும், விட்டாரா பிரீசா, எஸ்- கிராஸ், எர்டிகா ஆகிய கார்களின் விற்பனை 10.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

குறிப்பாக செப்டம்பருடன் முடிந்த 2ம் காலாண்டின் முடிவில், 3 லட்சத்து 93 ஆயிரத்து 130 என்றளவில், கார் விற்பனை 16.2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் மாருதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை 4 லட்சத்து 69 ஆயிரத்து 729 என்ற எண்ணிக்கையுடன் 36.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்