×

வாகன தயாரிப்பு நிறுவனங்களை பாதித்த கொரோனா… விற்பனையில் அடி வாங்கிய பஜாஜ் ஆட்டோ, ஹீரோ

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020-21ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) மொத்தம் 39.72 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும். 2019-20ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 46.15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020-21ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

புனேவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) மொத்தம் 39.72 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும். 2019-20ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 46.15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் இருசக்கர வாகன ஆலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 மார்ச் மாதத்தில் மட்டும் 3.69 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் 3.30 லட்சம் இருசக்கர வாகனங்களும், 39,315 வர்த்தக வாகனங்களும் அடங்கும். 2020 மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2.42 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன்தான் இதற்கு காரணம்.

ஹீரோ பைக்ஸ்

நாட்டின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2020-21ம் நிதியாண்டில் 57.91 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் (2019-20) காட்டிலும் மிகவும் குறைவாகும். அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 64.09 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2021 மார்ச் மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5.76 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.