×

இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் – செப். 23 தொடக்கம்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடி ஆன்லைன் விற்பனை ஸ்டோரினை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 23 ஆம் தேதியில் இருந்து நேரடி ஆன்லைன் விற்பனை தொடங்குவதாக கூறியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் செல்போன் விற்பனை அதிகமாக இருக்கும் என்கிற நிலையில், ஆப்பிள் நிறுவனம் நேரடி விற்பனையில் இறங்க உள்ளது. தற்போது ஆப்பிள் போன்கள் இந்தியாவில் நேரடி விற்பனை அனுமதிக்கப்படவில்லை. மூன்றாவது விற்பனையாளர்கள், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் மூலம்
 

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடி ஆன்லைன் விற்பனை ஸ்டோரினை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 23 ஆம் தேதியில் இருந்து நேரடி ஆன்லைன் விற்பனை தொடங்குவதாக கூறியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலத்தில் செல்போன் விற்பனை அதிகமாக இருக்கும் என்கிற நிலையில், ஆப்பிள் நிறுவனம் நேரடி விற்பனையில் இறங்க உள்ளது.

தற்போது ஆப்பிள் போன்கள் இந்தியாவில் நேரடி விற்பனை அனுமதிக்கப்படவில்லை. மூன்றாவது விற்பனையாளர்கள், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

உலக அளவில் செல்போன் விற்பனையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், இந்திய சந்தையை குறிவைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தில் ஆலைகளை அமைத்து வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை இந்தியாவில் அனுமதிக்கப்படாத நிலையில், இந்தியாவில் ஆலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தையை அந்த நிறுவனம் நடத்தி வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் நேரடி விற்பனையை தொடங்க உள்ளது.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குபவர்களுக்கு இலவச சேவைகள், இலவச டோர் டெலிவரி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.