×

டாடா ஸ்டீல் லாபம் ரூ.7,765 கோடி.. வருவாய் 19 சதவீதம் வளர்ச்சி...

 

டாடா ஸ்டீல் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7,765 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி உருக்கு தயாரிப்பு நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் 2022 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7,765 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 12.8 சதவீதம் குறைவாகும். 

2022 ஜூன் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.63,430 கோடியாக உள்ளது. இது 2021 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 18.6 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.54,504 கோடியாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, டாடா ஸ்டீல் நிறுவன பங்கின் விலை 7.27 சதவீதம் உயர்ந்து ரூ.107.65ஆக இருந்தது.