×

பெடரல் பேங்க் வட்டி வருவாய் 27 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.804 கோடி..
 

 

பெடரல் பேங்க் 2022 டிசம்பர் காலாண்டில் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே காலாண்டில் நிகர லாபமாக ரூ.803.6 கோடி ஈட்டியுள்ளது. 

தனியார் வங்கியான பெடரல் பேங்க் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பெடரல் பேங்க் 2022 டிசம்பர் காலாண்டில் அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே காலாண்டில் நிகர லாபமாக ரூ.803.6 கோடி ஈட்டியுள்ளது. மேலும், இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 54 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பெடரல் பேங்க் நிகர லாபமாக ரூ.521.7 கோடி ஈட்டியிருந்தது.

2022 டிசம்பர் காலாண்டில் பெடரல் பேங்க் நிகர வட்டி வருவாயாக (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.1,956 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பெடரல் பேங்க் நிகர வட்டி வருவாயாக ரூ.1,538 கோடி ஈட்டியிருந்தது. 2022 டிசம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, பெடரல் பேங்கின் மொத்த வாராக் கடன் 2.43 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.73 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

2022 டிசம்பர் காலாண்டில் பெடரல் பேங்கின் மொத்த வழங்கிய கடன் 19.08 சதவீதமும், திரட்டிய மொத்த டெபாசிட் 15 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, பெடரல் பேங்க் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.64 சதவீதம் குறைந்து ரூ.137.95ஆக இருந்தது.