×

வர்த்தக துளிகள்..  பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்த இண்டிகோ நிறுவனம்

 

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த மார்ச் காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, இண்டிகோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீதம் போனஸாக வழங்க உள்ளதாக தகவல்.  இண்டிகோ நிறுவனத்தில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவது  ஒரு பாரம்பரியமாக இருந்தது வந்தது ஆனால் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக அதன் வர்த்தக பாதித்ததால் 2019-20ம் நிதியாண்டு முதல் போனஸ் வழங்குவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இண்டிகோ நிறுவனம் மீண்டும் போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது.


நைட் பிராங்க் இந்தியா அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 3 கோடி டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர  சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை 58.4 சதவீதம் உயர்ந்து 19,119ஆக இருக்கும். இது 2022ல் 12,069ஆக இருந்தது. 2027ல் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 195ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 161ஆக இருந்தது.


சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் 1.29 கோடி உள்நாட்டு பயணிகளை இந்திய விமானங்கள் சுமந்து சென்றுள்ளது.  2022 ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில்  1.05 கோடி பயணிகள் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களில் சென்று இருந்தனர்.

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.87,416 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கி டிவிடெண்டைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.30,307 கோடி வழங்கி இருந்தது.  தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் டிவிடெண்ட் மத்திய அரசின் நிதி நிலவரத்தை பலப்படுத்தும்.