×

வர்த்தக துளிகள்...  பணத்தை செலுத்த தவறியதால் விற்பனை வரும் ஜெட் ஏர்வேஸின்  விமானங்கள்?

 

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் தீர்வு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகமான ஜலான்-கல்ராக் கூட்டமைப்பு தேவையான தொகையை செலுத்த தவறியதால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள், அந்நிறுவனத்தின் 11 விமானங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை திறந்து வைத்துள்ளனர். இதனால் விமான நிறுவனத்தை (ஜெட் ஏர்வேஸ்) கலைப்பு நிலைக்கு தள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரியை குறைத்தல், சரக்கு மற்றும் சேவை வரியை குற்றமற்றதாக்குதல்  மற்றும் மூலதன ஆதாய வரி முறையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு  இந்திய தொழில்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தொடங்கியுள்ளது. 2023-24 மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு அனைத்து தரப்பினருடான தனது ஆலோசனை கூட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கினார்.

இலவச உணவு தானிய திட்டமான பிரதமர் கரிப் கல்யாண் அன் திட்டம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டதன் எதிரரொலியாக, இந்த நிதியாண்டுக்கான மத்திய அரசின் உணவு மானிய செலவினம் ரூ.3 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் 50 சதவீதத்துக்கும் அதிகமாகும். நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசின் உணவு மானிய செலவினம் ரூ.2.07 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் பிராப்பர்டி அண்ட் புராஜக்ட்  மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆர்காம் நிறுவனத்தின் டவர் மற்றும் பைபர் சொத்துக்களை கையகப்படுத்துவதை நிறைவு செய்வதற்காக ஜியோ ரூ.3,500  கோடியை எஸ்.பி.ஐ. எஸ்க்ரோ கணக்கில் டெபாசிட் செய்ய உள்ளதாக தகவல்.