×

விலை உயர்வு அறிவிப்புக்கு மத்தியிலும் வாகன விற்பனை அமோகம்.. பஜாஜ், ஹோண்டா, மாருதி சுசுகி நிறுவனங்கள் ஹேப்பி..

பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியபோதிலும், கடந்த ஜனவரியில் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது. நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் ஆட்டோ கடந்த ஜனவரியில் மொத்தம் 4.25 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3.94 லட்சம் வாகனங்களை
 

பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியபோதிலும், கடந்த ஜனவரியில் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான பஜாஜ் ஆட்டோ கடந்த ஜனவரியில் மொத்தம் 4.25 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3.94 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் ஆட்டோ

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 11,319 கார்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜனவரி மாதத்தில் அந்நிறுவனம் உள்நாட்டில் 5,299 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. ஆக, 2021 ஜனவரி மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனம் 1,233 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 182 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்து இருந்தது.

மாருதி சுசுகி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரியில் மொத்தம் 1,60,752 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 1,42,604 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் அந்த மாதத்தில் 12,445 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.