×

சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்வு… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.83 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்ந்தது. சில பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் மூலதனம் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்பு மற்றும் தேவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் ஊக்குவிப்பு தொகுப்புகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்ததும் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் காண வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட
 

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்ந்தது.

சில பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் மூலதனம் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேலைவாய்ப்பு மற்றும் தேவை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் ஊக்குவிப்பு தொகுப்புகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்ததும் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் காண வழிவகுத்தது.

பிரதமர் மோடி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,929 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 756 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 163 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.11 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.83 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 592.97 புள்ளிகள் உயர்ந்து 37,981.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 177.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,227.55 புள்ளிகளில் முடிவுற்றது.