×

நிறுவனங்களின் நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னிறிவிப்பு செய்துள்ளனர். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 171 நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை
 

நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னிறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 171 நிறுவனங்கள் தங்களது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டி விட்டது. இருப்பினும், தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவது, இறப்பு விகிதத்தில் முன்னேற்றம், கொரோனாவுக்கு சிகிச்சைக் பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

அதேவேளையில் சர்வதே அளவில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலை ஏற்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. அக்டோபர் 9ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரம், அக்டோபர் 16ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த விவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது.

பங்கு வர்த்தகம்

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளது. இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்களும் இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.