×

எதிர்வரும் டிசம்பரில் வங்கிகளுக்கு 7 நாட்கள் லீவு…. 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருது

தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பரில் வங்கிகளுக்கு மொத்தம் 7 தினங்கள் விடுமுறை. குறிப்பாக டிசம்பர் 25 முதல் 27ம் தேதி வரை 3 தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் வங்கிகளுக்கு வாரந்தோறும் ஞாயிறுக்கிழமையன்று வார விடுமுறை. மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இது தவிர பிராந்திய விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது. பிராந்திய விடுமுறை தினங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு
 

தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பரில் வங்கிகளுக்கு மொத்தம் 7 தினங்கள் விடுமுறை. குறிப்பாக டிசம்பர் 25 முதல் 27ம் தேதி வரை 3 தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு வாரந்தோறும் ஞாயிறுக்கிழமையன்று வார விடுமுறை. மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இது தவிர பிராந்திய விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது. பிராந்திய விடுமுறை தினங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்யும். இதனால் மாநிலத்துக்கு மாநிலம் வங்கிகளுக்கான விடுமுறை தினங்களின் எண்ணிக்கை வேறுபடும்.

வங்கி விடுமுறை

எதிர்வரும் 2020 டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேசிய விடுமுறை தினம் என்பதால் அன்று வங்கிகள் செயல்படாது. எனவே இந்த வாரம் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஒட்டு மொத்த அளவில் மொத்தம் 7 நாட்கள் விடுமுறை. குறிப்பாக டிசம்பர் 25,26 மற்றும் 27ம் தேதிகளில் வங்கிளுக்கு தொடர்ச்சியாக 3 தினங்கள் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளின் விடுமுறை கருத்தில் கொண்டு தங்களது வங்கி தொடர்பான வேலைகளை மேற்கொண்டால் வசதியாக இருக்கும்.

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை தினங்கள்
டிசம்பர் 06 ஞாயிறு வார விடுமுறை
டிசம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 13 ஞாயிறு வார விடுமுறை
டிசம்பர் 20 ஞாயிறு வார விடுமுறை
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26 சனிக்கிழமை விடுமுறை
டிசம்பர் 27 ஞாயிறு வார விடுமுறை