×

2020 : உலகமே முடங்கிய நேரத்தில், டாப் 10 பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த முகேஷ் அம்பானி!

2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்துறை மொத்தமும் முடங்கியது. அந்த நிலையிலும் இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் கிடுகிடு வளர்ச்சி கண்டது. உலகின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. அப்படி வளர்ச்சி கண்ட நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ். இந்த காலகட்டத்தில்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தொழில் துறையில் மிகப்பெரிய தேக்கம் நிலவும் நேரத்தில் நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை தேடுவது
 

2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொழில்துறை மொத்தமும் முடங்கியது. அந்த நிலையிலும் இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் கிடுகிடு வளர்ச்சி கண்டது. உலகின் மிகப்பெரிய 10 நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. அப்படி வளர்ச்சி கண்ட நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ். இந்த காலகட்டத்தில்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானி இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொழில் துறையில் மிகப்பெரிய தேக்கம் நிலவும் நேரத்தில் நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை தேடுவது இயல்பானதுதான். அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கொரோனா தொழில் இழப்புகளை தங்களுக்கான வாய்ப்பாக கணித்தது. இதையடுத்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டது. 2020 ஆம் ஆண்டில் தொழில்கள் முடங்கிய நிலையிலும், உலக அளவில் முதலீடுகளை திரட்டியுள்ளது.

ஜியோ வருகைக்குப் பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிக அபரிமிதமாக உள்ளது. ஜியோவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை, முகேஷ் அம்பானி திரட்டி வருகிறார். எதிர்கால தொழில்நுட்பத்தில், செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தும் என்பதை அறிந்து ஜியோ நிறுவனத்துக்கு அதற்கேற்ப முதலீடுகளை திரட்டி வருகிறார்.

2020 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் நிறுவனத்தில் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சர்வதேச நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. குறிப்பாக இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவுக்கு என தனியாக ’சிப்’ தயாரிக்க உள்ளது. இதன் மூலம் ஜியோ தேடுபொறி, இயங்குதளம் உள்ளிட்டவற்றை வழங்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். 5ஜி தொழில் நுட்ப சேவைகளை வழங்குவதற்கு ஏற்ப ரிலையன்ஸ் இப்போதே தங்களுக்கு என மென்பொருள் மற்றும் வன்பொருட்களை வடிவமைக்கவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதுபோல, பேஸ்புக் நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் பேமென்ட் பேங்க் மூலம், வாட்ஸ்அப் பணப் பரிமாற்றம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதவிர
இந்தியாவில் பேஸ்புக் நிறுவனமும் – ரிலையன்சும் இணைந்து பல புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளன. இது தவிர, குவால்காம் நிறுவனத்துடனும் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் எதிர்கால தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாக உள்ளது.

கொரோனா காலத்தில் சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி நிதி திரட்டி உலக அளவில் கவனிக்க வைத்தார் முகேஷ் அம்பானி. இப்படி, 2020 ஆண்டில் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் நிறுவனம் திரட்டிய முதலீடுகள் மூலம், உலக பணக்காரர்கள் வரிசையில் 4 வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய பணக்காரர் ஒருவர், உலகப் பணக்காரர் வரிசையில் முதல் 10 இடத்துக்குள் வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் முடக்கத்திலும் , உலக அளவில் அதிக முதலீடுகளை திரட்டிய முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் உள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் அடுத்த ஆண்டில், இந்தியாவிலும், உலக அளவிலும் தவிர்க்க முடியாத நிறுவனமான ரிலையன்ஸ் வளர உள்ளது. அடுத்த ஆண்டில் குறைந்த விலையில் 4 ஜி போன், ஜி சேவைகளை அளிப்பது என பல திட்டங்களை வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

இது தவிர ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்திலும் உலகின் முக்கிய நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை இறக்கியுள்ளன. இதன் மூலம், தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம், எண்ணெய் , எரிவாயு உற்பத்தி, உள்கட்டமைப்பு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் உருவாக உள்ளது.

எத்தனை பெரிய பெரிய சவால்கள் வந்தாலும், புதிய வாய்ப்புகளை தேடுவதுதான் தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்பார்கள். அந்த உத்தியை ரிலையன்ஸ் 100 சதவீதம் கடைபிடித்து வருவதாக தொழில்துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உலக நிறுவனமான வளர்வது இந்தியர்களுக்கு மகிழ்ச்சிதான்!