×

அதிகரித்த வேலைவாய்ப்புகள் – தமிழகம் எத்தனையாவது இடம் ?

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டில், இந்தியா முழுவதும் வேலை வாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் வளர்ச்சியை நோக்கி திரும்பி உள்ளது கடந்த ஆண்டில், ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசின் செயல்பாடுகள் காரணமாக, 2020 டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை சதவீதம் கடந்த டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள்
 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டில், இந்தியா முழுவதும் வேலை வாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் வளர்ச்சியை நோக்கி திரும்பி உள்ளது

கடந்த ஆண்டில், ஊரடங்கு காலத்திலும் தமிழக அரசின் செயல்பாடுகள் காரணமாக, 2020 டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை சதவீதம் கடந்த டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் 1.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பர் மாதத்தில் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அளவில் வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பர் மாதத்தில் 9.1 சதவீதகமாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் தவிர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலங்களான, குஜராத்தில் வேலையின்மை விகிதம் 3.9 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 3 சதவீதமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவின் வேலையின்மை விகிதம் 3.9 சதவீதத்தில் இருந்து டிசம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை மற்றும் விவசாய நடவடிக்கைகள் வளர்ச்சி உயர்ந்துள்ளதன் காரணமாகவும், சேவைத் துறை பங்களிப்பு அதிகரித்துள்ளதாலும் வேலையின்மை விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. நவம்பர் – டிசம்பர் மாதங்களில் சம்பளம் மற்றும் கூலி ஆகியவை தொழிலாளர்களுக்கு அதற்கு முந்தைய மாதங்களை விட உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை தொழில்துறைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக அதிகரித்தது. அதன் பின்னர் ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 5 சதவீதமாகவும், அக்டோபர் மாதத்தில் 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது தொடர்பாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டதன் காரணமாக வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது என கூறினர். குறிப்பாக

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல்- அக்டோபர் மாதங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இதையடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகள் வேலவாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தன. குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 4.1 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. இது இதர மாநிலங்களை விட அதிகப்டச வளர்ச்சியாகும். மற்றும் 151% சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர மாநில அரசு நிதி முதலீடுகளை திரட்டுவதும் முக்கிய காரணமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் ஆதித்யா நாராயணன். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னேற்பாடுகள், அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் விவசாய உற்பத்தித் வளர்ச்சி, தொழில்துறை நடவடிக்கைகள் போன்றவை தமிழ்நாடு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தொழில்துறை சார்ந்த மற்றும் சேவை துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பார்மா, டெலிகாம், எப் எம் சி ஜி, கெமிக்கல்ஸ் உள்ளிட்ட துறைகளில் 20 சதவீதம் வரை வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறந்து விளங்குவதாக சமீபத்தில், அரசு வெளியிட்ட விளம்பரங்களில் காட்டப்பட்டன. ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலங்களின் ஒன்று தமிழகம் என்பது நமக்கு பெருமைதான்!